Akhilēśh Bālājī

Akhilesh Balajı

அகி²லேஶ் பா³லாஜீ

நான் செய்யும் கலை பற்றிய பகுதிக்கு வரவேற்கிறேன். நான் ௰௩ ஆண்டுகளாக கர்நாடக இசை கற்றுக்கொண்டு வருகிறேன். லயம், ராகம் மற்றும் சாஹித்யம் ஆகியவற்றின் நடுவில் இருக்கும் நிலையில், நாத தியானம் செய்வதில் எனக்கு சாந்தி கிடைக்கிறது.

நான் இசையை சமுதாயத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு தத்துவமாக பார்க்கிறேன்—அது ஒரே விஷயத்திற்கு பல தரிசனங்களை அளிக்கிறது. கடவுள், இயற்கை, ஒழுக்கம், அல்லது சமூக முன்னேற்றம் ஆகிய எதுவாக இருந்தாலும், இசையில் அவற்றைப் பற்றிய கருத்துகள் உள்ளன. அவற்றை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டி, அவர்களின் மனதைத் திறப்பது கலைஞர்களின் பொறுப்பு.

எனக்கு தீட்சிதர் கீர்த்தனைகளில் குறிப்பாக ஆர்வம் உள்ளது—இப்பாடல்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் சாஹித்யம் அனைத்தும் முழுமை பெற்றவை.

Some (Carnatic) listening recommendations.

the logo of Akhilesh Balaji: a right triangle adjacent to the letter BFreshly built by Akhilesh Balaji in 2026.